Breaking News

இந்தியாவில் உள்ள ரினால்ட்-நிஸ்ஸான் அலையன்ஸ் பிளான்ட் தனது ஒரு மில்லியனாது வாகனத்தை உருவாக்கியது

காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் அடுத்த ஒரகடத்தில் உள்ள ரினால்ட்-நிஸ்ஸான் அலையன்ஸ் உள்ள ஊழியர்கள் தனது ஒரு மில்லியானவது வாகனத்தை தயாரித்தலின் மூலம் உற்பத்தியில் ஒரு மைல்கல்லை அடைந்துள்ளது.Displaying KPM.jpgDisplaying KPM.jpgDisplaying KPM.jpg
இந்த மைல்கள் கார் -நிஸ்ஸான் மைக்ரா அண்மையில் வெளியிட்ப்பட்டது

இந்த நிலையமானது, உலகளவில் உள்ள மிகப்பெரிய கூட்டணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும் இதன் இயக்கம் மார்ச் 2010 ஆம் ஆண்டு தொடக்க முதலீடாக ஐ.என்.ஆர் 45 பில்லியன் கொண்டு தொடங்கியது இந்த அலையன்ஸ் உலகத்தரம் வாய்ந்த பவர்ட்ரெயின் உற்பத்தி நிறுவனமாக உருவாக்கவும் இயந்திரங்களைப் பெறுவதற்காகவும் கூடுதலாக ஐ.என்.ஆர் 16 பில்லியன் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது இந்த பிளான்ட் ஆனது 32 புதிய ரினால்ட் நிஸ்ஸான் மற்றும் டட்சன் மாடல்களை மற்றும் அதன் துணை மாடல்களையும் உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியுள்ளது இந்த நிலையமானது உள்ளுர் மற்றும் சர்வதேச சந்தை இரண்டிலும் ஈடுபடுத்தி, 2010 ஆண்டு முதல் இதுவரை 106 நாடுகளுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்ட யூனிட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராக விளங்குகிறது.
அந்த காலத்தில் அதன் வருடாந்தர உற்ப்பத்தி அளவு 2010 ஆண்டில் இருந்த 75 ஆயிரம் யூனிட்களில் இருந்து தற்போதைய வருடம் 2015 மார்ச் வரை 2 லட்சமாக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் இந்திய பகுதி, நிஸ்ஸான் ஆப்ரிக்காவில் தலைவர் மற்றும் முன்னாள் அலையன்ஸ் துணை தலைவா் கிறிஸ்டியன் மார்ட்ரூஸ் தெரிவிக்கும் போது சென்னையில் இந்த முக்கிய நிலையத்தில் தற்போது உற்பத்தி செய்துவரும் முக்கிய மைல்கல்லை அடைவதற்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
நமது சென்னை நிறுவனமானது, இந்தியாவில் நமது வணிக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதை தொடந்து செய்துவரும் இன்றைய மைல்கல்லானது இந்தியாவில் நிஸ்ஸான் மற்றும் ரினால்ட் தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் உள்ள பிரபலத்தை பிரதிபலிக்கிறது மேலும் நமது ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறனையும் சேர்த்து பிரிதிபலிக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசிடமிருந்து நாங்கள் பெற்றுவரும் அதிக அளவு ஆதராவும் மகிழ்ச்சியளிக்கிறது.
உயர்ந்த தரம் உள்ளுரில் தயாரிக்கப்படும் கார்கள் போன்ற இந்திய வாடிக்கையாளர்களிடம் எழுந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த நிறுவனமானது அலையன்ஸ்-யால் உருவாக்கப்பட்டது. இது சென்னையில் மிகப்பெரிய ஆர் & டி மையத்தையும் கொண்டுள்ளது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் உற்பத்திகள் உள்ளுருக்கு உகந்ததாக இருப்பதை உறுதி செய்வதில் முக்கிய பெரும்பங்கு வகிக்கிறது.
உற்பத்தி நிலையம் மற்றும் ஆர் & டி நிறுவனம் இணைந்து தமிழ்நாட்டில் நேரடி பணியாக சுமார் 12 ஆயரம் மேலும் இந்திய சப்ளை சுழற்சியில் 40 ஆயிரம் கொண்டு உள்ளுர் பொருளாதாரத்தில் பங்களிப்பை அதிக்கபடுத்தியுள்ளது.
ரினால்ட் நிஸ்ஸாக் அலையன்ஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடட் யின் பிளான்ட் நிர்வாகி இயக்குனர் கோளின் மாக்டொனால்ட் கூறுகையில், இந்த பிளான்ட் தொடர்புடைய அனைவருக்கும் இது ஒரு பெருமைக்குரிய நாளாகும் சராசரியாக நாங்கள் 2010 ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் இரண்டு புதிய மாடல்களை நிறுவி இதுவரை மூன்று பிராண்ட்களை நிறுவியுள்ளோம் என்று கூறினார்.

No comments

Thank you for your comments