Breaking News

மொறுமொறு அரிசி முறுக்கு

 தீபாவளிக்குக் நொறுக்குத் தீனியாகச் செய்யக்கூடிய எளிமையான மற்றும் சுவையான முறுக்கு.

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி மாவு – 2 கப்

  • உளுந்தம் மாவு – ¼ கப் (வறுத்து அரைத்தது)

  • பொட்டுக்கடலை மாவு – 2 மேஜைக்கரண்டி

  • வெண்ணெய் (Soft Butter) – 1½ மேஜைக்கரண்டி

  • எள்ளு / சீரகம் / ஓமம் – 1 தேக்கரண்டி

  • பெருங்காயத் தூள் – ¼ தேக்கரண்டி

  • உப்பு – தேவையான அளவு

  • எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை படிநிலைகள்:

1. மாவு தயாரித்தல்:

  1. உளுந்தம்பருப்பை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து, ஆறவைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.

  2. ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்தம் மாவு, பொட்டுக்கடலை மாவு, எள்ளு (அல்லது ஓமம்), பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

  3. இதில் வெண்ணெயைச் சேர்த்து மாவோடு நன்றாகப் பிசிறி விடவும்.

2. மாவு பிசைதல்:

  1. கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவை விட மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும் (மாவு கெட்டியாக இருந்தால் முறுக்கு புழியக் கடினமாக இருக்கும், தளர இருந்தால் அதிக எண்ணெய் குடிக்கும்).

3. முறுக்கு புழிதல் & பொரித்தல்:

  1. முறுக்கு அச்சில் (3 கண் அல்லது 1 கண் அச்சு) லேசாக எண்ணெய் தடவி, பிசைந்த மாவை நிரப்பவும்.

  2. ஒரு கரண்டியின் பின்புறத்திலோ அல்லது சிறிய தட்டுகளிலோ எண்ணெயைத் தடவி, அதன் மேல் முறுக்குகளாகச் சுற்றிப் புழியவும்.

  3. கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மிதமான தீயில் வைத்துப் புழிந்த முறுக்குகளை மெதுவாக எண்ணெயில் போடவும்.

  4. ஓசை அடங்கி, முறுக்கின் கொதிப்பு குறைந்ததும் பொன்னிறமாக எடுத்து வடிக்கவும்.


சமையல் குறிப்புகள் (Chef's Tips):

  • முறுக்கிற்கு: வெண்ணெய் அதிகமனால் முறுக்கு எண்ணெயில் கரையும், குறைந்தால் மொறுமொறுப்பு குறையும். சரியான அளவில் சேர்க்கவும்.

No comments

Thank you for your comments