“கூட்டுறவுத் துறை சார்பில் கடன் வழங்கும் இலக்கு நிர்ணயம்!” - ஐயப்பந்தாங்கல் கூட்டுறவு கடன் சங்கத்தில் மண்டல இணைப்பதிவாளர் கோ. யோகவிஷ்ணு நேரில் ஆய்வு!
காஞ்சிபுரம் | அக்டோபர் 13, 2026
இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஐயப்பந்தாங்கல் கூட்டுறவு சங்கத்தில் நேரில் ஆய்வு:
இன்று நடைபெற்ற சிறப்பு முகாமையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பந்தாங்கல் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முகாமினை காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் திரு. கோ. யோகவிஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- இச்சிறப்பு முகாமில் சிங்கப்பெண் கடன் திட்டத்தின் கீழ் வரப்பெற்ற புதிய கடன் மனுக்களை மண்டல இணைப்பதிவாளர் நேரில் பெற்றுக்கொண்டார்.
- கூட்டுறவுத் துறையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்புக் கடன் முகாம்களில் உரிய ஆவணங்களுடன் கலந்துகொண்டு பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்பு எண் & விவரங்கள்:
இச்சிறப்பு முகாம்கள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் 9884000845 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு முழுமையான தகவல்களைப் பெறலாம் என மண்டல இணைப்பதிவாளர் திரு. கோ. யோகவிஷ்ணு தெரிவித்துள்ளார்.
Short English Summary for Readers:
Kanchipuram Joint Registrar Inspects Cooperative Credit Mela at Ayappanthangal Targeting Rs. 1.80 Lakh Crore Distribution
Kanchipuram | October 13, 2026
To achieve the statewide target of disbursing Rs. 1,80,000 crore through cooperative institutions, special weekly credit camps are being held across Tamil Nadu every Tuesday. Kanchipuram Zonal Joint Registrar K. Yogavishnu inspected the special credit camp at the Ayappanthangal Urban Cooperative Credit Society, where he personally received loan applications under the 'Singappenn' credit scheme. Citizens have been urged to utilize these camps with necessary documents, and further inquiries can be made by contacting 9884000845.
No comments
Thank you for your comments