Breaking News

“நீர்வள்ளூர், பரந்தூர் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை!” - மின்வாரியம் அறிவிப்பு!

காஞ்சிபுரம் | அக்டோபர் 13, 2026

நீர்வள்ளூர் 110/33-11 கி.வோ துணை மின் நிலையம் மற்றும் பரந்தூர் 33/11 கி.வோ துணை மின் நிலையங்களில் அவசர மின் சாதன பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை (அக்டோபர் 14, 2026 புதன்கிழமை) காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை அப்பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் (பொ) அவர்கள் தெரிவித்துள்ளார்.

மின் தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:

1. நீர்வள்ளூர் துணை மின் நிலையப் பகுதிகள்:

நீர்வள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கீழ்க்கண்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்:

  • சின்னையன் சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், நீர்வள்ளூர், தொடுர், மேல்மதுரமங்களம், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம் மற்றும் மருதம்.

2. பரந்தூர் துணை மின் நிலையப் பகுதிகள்:

பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கீழ்க்கண்ட கிராமங்களிலும் அதே நேரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்:

  • காரை, சிறுவாக்கம், ஆண்டிசிறுவள்ளூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், கொட்டவாக்கம், எடையார்பாளையம், செல்லம்பட்டிடை, கோட்டூர், எலுமயன் கோட்டூர், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், 144 தண்டலம், நெல்வாய் மற்றும் மேல்படுவூர்.


Short English Summary for Readers:

Power Shutdown Announced in Neervallur and Parandur Substation Areas on October 14

Kanchipuram | October 13, 2026

Due to scheduled maintenance works at the Neervallur 110/33-11 KV and Parandur 33/11 KV sub-stations, the Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO) has announced a power shutdown on Wednesday, October 14, 2026, from 9:00 AM to 2:00 PM. Power supply will be suspended in Neervallur, Chinnaiyan Chathiram, Rajakulam, Parandur, Ekanapuram, Kara, Siruvakkam, and several surrounding villages across Kanchipuram north division.

No comments

Thank you for your comments