Breaking News

“பேசியிருந்தால் வீட்டில்தான் இருந்திருப்பீர்கள்!” - சட்டப்பேரவையில் உதயநிதி Vs அமைச்சர்கள் காரசார விவாதம்!



சென்னை | செப்டம்பர் 04, 2026

தமிழகச் சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான (செப்.3) விவாதத்தின் போது, சட்டம் - ஒழுங்கு, போதைப்பொருள் விவகாரம், போக்சோ வழக்குகள் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

செப்டம்பர்மாத ராசி பலன்கள் 2026
ராஜயோகங்கள் தரும் அதிர்ஷ்டம்!
இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கிறது!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் விவாதம்:

சட்டப்பேரவையில் விவாதத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக ஆட்சிக் காலத்தில் போக்சோ வழக்குகளும் போதைப்பொருள் புழக்கமும் அதிகரித்ததாகக் குற்றஞ்சாட்டினார்.

 அதன் பிறகு நடந்த விவாதம்:

அமைச்​சர் ஆதவ் அர்​ஜூ​னா: திமுக ஆட்​சி​யில் கொலைகள் எண்​ணிக்கை கொள்கை விளக்​கக் குறிப்​பில் குறைத்து பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. 2020-ல் 1,597 கொலைகள் நடந்த நிலை​யில், 2021, 2022-ம் ஆண்​டு​களில் 1,597 கொலைகள்​தான் பதி​வாகி​யுள்​ளன.


திமுக கொறடா எ.வ.வேலு: தவெக ஆட்​சி​யில் 116 நாட்​களில் அதிக அளவில் குற்​றங்​கள் நடந்​துள்​ளதே என்​பது​தான் கேள்​வி.

குற்​றங்​களை குறைக்க என்ன செய்​தீர்​கள் என்று கூறு​வதை விடுத்து 2021-ல் அப்​படி நடந்​தது என எதற்கு ஏலம் விடு​கிறீர்​கள்?

ஆதவ் அர்​ஜு​னா: போக்சோ வழக்​கு​கள் 2023-24-ல் 40 சதவீதம் அதி​க​மாக பதி​வாகி​யுள்​ளது. போதைப் பொருள் கலாச்​சா​ரம் கடந்த 6 ஆண்​டு​களில் அதி​கரித்​து​விட்​டது.

உதயநி​தி: எங்​கள் ஆட்​சி​யில் போக்சோ குறித்து அதிக விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்​ட​தால், அதிக வழக்​கு​கள் பதி​வாகின.


அமைச்​சர் ராஜ்மோகன்: சட்​டம் - ஒழுங்​கு, பெண்​கள் பாது​காப்பு என நீங்​கள் கூறு​வது​தான் காதுகுத்​து. திமுக​வில் இருந்த ஜாபர் சாதிக்​கிடம் போதைப் பொருள் தொடர்​பாக விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அண்ணா பல்​கலைக்​கழக மாணவி வழக்​கின் குற்​றப்​பத்​திரி​கை, அவரது பெயர் உள்​ளிட்ட அடை​யாளங்​கள் ஆன்​லைனில் வெளி​யாகின.

உதயநி​தி: ஓராண்​டுக்கு முன்பு எங்​கள் ஆட்​சியை அதி​க​மாக பாராட்​டிப் பேசிய அமைச்​சர் ராஜ்மோகன் இப்​போது இடம் மாறிய​தால் மாற்​றிப் பேசுகிறார்.

ராஜ்மோகன்: பட்​டிமன்​றத்​தில் பேசிய என்னை சட்​டப்​பேர​வைக்கு கொண்டு வந்​துள்​ளார் எங்​கள் தலை​வர்.

ஆதவ் அர்​ஜு​னா: தூத்​துக்​குடி துப்​பாக்​கிச் சூடு விவ​காரத்​தில் 17 காவல் துறை அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணை​யம் பரிந்​துரை செய்​தது. ஆனால், யார் மீதும் நீங்கள் நடவடிக்கை எடுக்​க​வில்​லை.

உதயநி​தி: அருணா ஜெகதீசன் அறிக்கை தற்​போது உங்​கள் கையில் இருக்​கிறது. தைரி​யம் இருந்​தால் நீங்​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும். அரசுக்கு இதை சவாலாக கூறுகிறேன்.

அமைச்​சர் ஆனந்த்: பிரச்சாரத்துக்கு எல்லா இடங்​களி​லும் அனு​மதி வழங்​கி​யிருந்​தால் 234 தொகு​தி​களி​லும் வெற்றி பெற்​றிருப்​போம்.

உதயநி​தி: பிரச்​சா​ரத்​தின்​போது நாங்​கள் தவெக பற்றி எது​வும் பேச​வில்​லை. ஒரு கூட்​டத்​தில்​கூட இவர்​களை விமர்​சிக்​க​வில்​லை. எல்லா கட்​சிகளைப் போல, தவெக கூட்​டத்​துக்​கும் சட்​டப்​பூர்​வ​மாக அனு​மதி கொடுத்​தோம்.

ஆதவ் அர்​ஜு​னா: எங்​களைப் பற்றி பேசாத​தால் இங்கே இருக்​கிறீர்​கள். பேசி​யிருந்​தால் வீட்​டில் இருந்​திருப்​பீர்​கள். இவ்​வாறு விவாதம் நடந்தது.

‘யாரும் ஓடிவிடாதீர்கள்’

விவாதம் நீண்​டு​கொண்டே சென்​ற​போது ஒரு கட்​டத்​தில் எழுந்த முதல்​வர் விஜய், “உறுப்​பினர்​களின் அனைத்து கேள்வி​களுக்​கும் 7-ம் தேதி பதில் கூறுகிறேன்.

நான் இங்கு இல்​லா​விட்​டாலும் உங்​கள் கேள்வி​கள் எனக்கு வந்​து​விடும். அதற்​குரிய பதிலை தரு​கிறேன். நான் பேசும்​போது யாரும் எழுந்து ஓடி​விடக் கூடாது” என்று கூறி​விட்டு பேர​வையை​விட்டு வெளி​யேறி​னார்.

இதற்கு பதில் அளித்த உதயநி​தி, “கடைசி​யாக யார் ஓடிப்​போ​னார்​கள் என்​பது எல்​லோருக்​கும் தெரி​யும். இதை சொல்​லி​விட்டு முதல்​வர் ஓடி​விட்​டார். ஒரு மணி நேரத்​துக்கு முன்​பாகவே கூறி​யிருந்​தால் பிரச்​சினை வந்​திருக்​காது”என்​றார்.

No comments

Thank you for your comments