Breaking News

“மழையில் நனையும் நெல்மணிகள்!” - காஞ்சிபுரத்தில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் தவிப்பு!

 காஞ்சிபுரம் | செப்டம்பர் 04, 2026

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல்மணிகளைக் குவியல் குவியலாகக் கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர்மாத ராசி பலன்கள் 2026
ராஜயோகங்கள் தரும் அதிர்ஷ்டம்!
இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கிறது!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

அறுவடை தீவிரமடைந்தும் திறக்கப்படாத கொள்முதல் நிலையங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட உத்தரமேரூர், சாலவாக்கம், களக்காட்டூர், விச்சாந்தாங்கல், காலூர், மேல்பெரமநல்லூர், வேடல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனர்.


தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகங்களிலும், திறந்தவெளிகளிலும் விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர். ஆனால் நிலையங்கள் இன்னும் செயல்படத் தொடங்காததால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் நாள் கணக்கில் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

"அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் திறந்தவெளியிலேயே கொட்டி வைத்து காத்துக் கிடக்கிறோம். அதிகாரிகள் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து நெல்மணிகளைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்."

பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் பகுதி விவசாயிகள்

தொடர் மழையால் நனையும் பயிர்கள் - வேதனையில் விவசாயிகள்

கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்கள் மழையில் நனைந்து முளைத்துவிடுமோ அல்லது பாழாகிவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் பெருங்கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நெல் குவியல்கள் சேதமடைவதைத் தடுக்கும் வகையில், விவசாயிகள் இரவு பகலாகத் தார்ப்பாய்களைக் கொண்டு மூடிப் பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் காற்றுடன் பெய்யும் கனமழையால் நெல்மணிகள் நனையும் அபாயம் நீடிக்கிறது.

மாவட்ட நிர்வாகத்திற்கு அவசரக் கோரிக்கை

விவசாயிகளின் உழைப்பு வீணாகாமல் இருக்கவும், பொருளாதார இழப்பைத் தவிர்க்கவும் தமிழ்நாடு அரசும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட வேண்டும். தாமதமின்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, நெல்மணிகளைக் கொள்முதல் செய்து பாதுகாப்பான சேமிப்புச் கிடங்குகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



No comments

Thank you for your comments