Breaking News

“திமுக மறுசீரமைப்பு & ஆலோசனை கூட்டம்” - உத்தரமேரூரில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூடல்!


காஞ்சிபுரம் | செப்டம்பர் 04, 2026

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பாக, மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மற்றும் காஞ்சிபுரம், உத்தரமேரூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (04.09.2026 - வெள்ளிக்கிழமை) உத்திரமேரூர் அடுத்துள்ள மல்லியங்கரணை பிரியா மகாலில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

செப்டம்பர்மாத ராசி பலன்கள் 2026
ராஜயோகங்கள் தரும் அதிர்ஷ்டம்!
இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கிறது!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தலைமை

இக்கூட்டத்திற்குப் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத் திமுக செயலாளருமான க. சுந்தர் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மற்றும் உத்தரமேரூர் தொகுதிகளின் அடிமட்ட அளவிலான கட்சிப் பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் வாக்குச்சாவடி முகவர்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

"கழகத் தலைமையின் வழிகாட்டுதலின்படி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் திமுகவின் அடிமட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்."

க. சுந்தர், மாவட்டச் செயலாளர்

தலைமைக் கழக மறுசீரமைப்புப் பிரதிநிதிகள் வருகை

இக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழகத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குச் சிறப்புப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட கழக மறுசீரமைப்புப் பிரதிநிதிகள் மருது கணேஷ் மற்றும் இராணி ரவிசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் அவர்கள் பேசுகையில், தலைமைக் கழகத்தின் மறுசீரமைப்புத் திட்டங்கள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் மண்டல ரீதியிலான களப்பணிகள் குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை நிர்வாகிகளுக்கு வழங்கினர்.


முக்கியக் கட்சி நிர்வாகிகள் & உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்பு

இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான முக்கிய தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் நேரில் பங்கேற்றுத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.

நாடாளுமன்ற மற்றும் தலைமை நிர்வாகிகள்:

காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், மாவட்டப் பொருளாளர் சனீபிராண்ட் கே. ஆறுமுகம், தலைமைக் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சுகுமார், தலைமைக் பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி மற்றும் மாநகரச் செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒன்றிய, நகர மற்றும் அணி நிர்வாகிகள்:

ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், பி. சேகர், டி. குமார், பி.எம். குமார், க. குமணன், படுநெல்லி பி.எம். பாபு, பேரூர் செயலாளர்கள் என்.எஸ். பாரிவள்ளல், என். பாண்டியன், பகுதி செயலாளர்கள் திலகர், சந்துரு, தசரதன், வெங்கடேசன், மற்றும் மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.எஸ். இராமகிருஷ்ணன், மாநில தொண்டரணி செயலாளர் சுகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மகளிரணி மற்றும் உள்ளாட்சி அமைப்பினர்:

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், துணை அமைப்பாளர்கள் சஞ்சய் காந்தி, மணி மற்றும் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செல்வி உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


No comments

Thank you for your comments