Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்


காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

செப்டம்பர்மாத ராசி பலன்கள் 2026
ராஜயோகங்கள் தரும் அதிர்ஷ்டம்!
இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கிறது!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தாட்கோ மேலாண்மை இயக்குநருமான கா.சு. கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தி. சினேகா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்து துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை, பணிகளின் முன்னேற்றம் மற்றும் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்துவது, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆஷிக் அலி, திருப்பெரும்புதூர் சார் ஆட்சியர் வி. நல்லசிவன், மகளிர் திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments