Breaking News

“கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!” - கர்நாடக சட்டப்பேரவையில் புயலைக் கிளப்பிய பாஜக!


 பெங்களூரு | ஆகஸ்ட் 18, 2026

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் மானை வேட்டையாடியதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), மற்றும் லாசர் குமார் (33) ஆகிய மூன்று தமிழர்களைக் கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் தென் மாநிலங்களில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆவணி மாத ராசி பலன்கள் 2026
[ ஆக.18  முதல் செப்.17 வரை ]
"சூரியன் ஆட்சி, குரு உச்சம்! 
கன்னியில் புதன் உச்சம்,  துலாமில்
சுக்ரன் ஆட்சி

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு யோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

படுகொலை செய்யப்பட்ட 3 தமிழர்களின் உடல்களும் இறுதித் திருப்பலிக்குப் பிறகு, அவர்களின் சொந்த கிராமங்களில் நேற்று அடக்கம் செய்யப்பட்டன. இச்சம்பவத்தைக் கண்டித்துப் பல இடங்களில் வனத்துறை அலுவலகங்கள் சூறையாடப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூடு நடந்த ஷாக்யா வனப்பகுதியில் கொள்ளேகால் துணை ஆணையர் தினேஷ் குமார் மீனா தலைமையில் அதிகாரிகளும் காவல்துறையினரும் நேரில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களைச் சேகரித்தனர்.

“இது அரசே நடத்திய என்கவுண்ட்டர்!” - கர்நாடக சட்டப்பேரவையில் R. அசோகா ஆவேசம்:

இச்சம்பவம் கர்நாடக சட்டப்பேரவையிலும் எதிரொலித்து கடும் அமளியை ஏற்படுத்தியது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா இதுகுறித்து அவையில் பேசியதாவது:

  • பொய்க் குற்றச்சாட்டு: "ஹனூர் வனப்பகுதியில் 3 பேரைச் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். இது அரசே முன்னின்று நடத்திய என்கவுண்ட்டர். அப்பாவி விவசாயிகளை வேட்டைக்காரர்கள் எனக் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி படுகொலை செய்திருக்கிறார்கள்."
  • தமிழர்களின் அச்சம்: "கர்நாடகாவில் மக்கள் இதற்காகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இந்த படுகொலையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இச்சம்பவத்தால் கர்நாடகாவில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களுக்குப் பெரும் அச்சமும் பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு உரிய நீதியை உடனடியாக வழங்க வேண்டும்."

துணை முதல்வர் பதில் & பாஜக எம்.எல்.ஏ-க்கள் அமளி:

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்துப் பேசிய கர்நாடக துணை முதல்வர் ஜி. பரமேஷ்வர்:

"இச்சம்பவத்தை அரசு செய்த கொலை என அவசரப்பட்டுச் சொல்லக்கூடாது. இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. விசாரணை முழுமையாக முடிந்த பின்னர், அவையில் விரிவாக விவாதிக்கப்படும்," என்றார்.

துணை முதல்வரின் இந்தப் பதிலைக் ஏற்க மறுத்த பாஜக எம்.எல்.ஏ-க்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாகச் சட்டப்பேரவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.



No comments

Thank you for your comments