Breaking News

“படுநெல்லி இரட்டைக் கொலை வழக்கு!” - பகவதி என்ற வாலிபர் அதிரடி கைது: மேலும் இருவருக்குத் தனிப்படை வலை!


 காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 18, 2026

காஞ்சிபுரம் மாவட்டம் B5 பொன்னேரிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படுநெல்லி கிராமத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பகவதி என்ற வாலிபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ஆவணி மாத ராசி பலன்கள் 2026
[ ஆக.18  முதல் செப்.17 வரை ]
"சூரியன் ஆட்சி, குரு உச்சம்! 
கன்னியில் புதன் உச்சம்,  துலாமில்
சுக்ரன் ஆட்சி

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு யோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 வழக்குப்பதிவு & கைதான எதிரி விபரம்:

கடந்த 17.08.2026 அன்று படுநெல்லி கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில், அதே ஊரைச் சேர்ந்த சந்திரசேகர் (27) மற்றும் நீலகண்டன் (27) ஆகிய இரு இளைஞர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக B5 பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் குற்ற எண். 234/2026, BNS 103(1) (பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு)-ன் கீழ் காவல்துறையினர் வழக்கப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

  • கைது செய்யப்பட்ட எதிரி:   

    இக்கொலை வழக்கில் தொடர்புடைய படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த பகவதி (24) (த/பெ ரகு) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றக் காவலில் (Judicial Custody) அடைத்துள்ளனர்.

தலைமறைவு எதிரிகளுக்குத் வலைவீச்சு:

இக்கொலை வழக்கில் தொடர்புடைய முக்கியத் தலைமறைவு எதிரிகளான புஷ்பராஜ் மற்றும் கலைச்செல்வன் ஆகிய இருவரையும் தீவிரமாகத் தேடி பிடிப்பதற்காகக் காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர வலைவீசித் தேடப்பட்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments