Breaking News

“மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது!” - தமிழகத் தலைவர்களின் கண்டனத்திற்கு டி.கே. சிவகுமார் அதிரடி பதில்!

 பெங்களூரு | ஆகஸ்ட் 18, 2026

கர்நாடக மாநிலம் காவிரி வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், "ஒரு மாநிலத்தின் நிர்வாக விஷயத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது" என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.

ஆவணி மாத ராசி பலன்கள் 2026
[ ஆக.18  முதல் செப்.17 வரை ]
"சூரியன் ஆட்சி, குரு உச்சம்! 
கன்னியில் புதன் உச்சம்,  துலாமில்
சுக்ரன் ஆட்சி

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு யோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

“எங்கள் மாநிலத்தைக் காக்க எங்களுக்குத் தெரியும்!” - டி.கே. சிவகுமார் பேட்டி:

பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரிடம், வனத்துறைத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துத் தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்து வரும் கருத்துகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்கள்:

  • அடிப்படைப் புரிதல் தேவை: "ஒரு மாநிலத்தின் உள்நாட்டு நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அல்லது வேறு எந்த தலைவராக இருந்தாலும் இந்த அடிப்படைப் புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்."
  • எல்லை மீற முடியாது: "தமிழ்நாட்டில் உள்ள சட்டம் - ஒழுங்கு விவகாரங்களில் என்னால் சென்று தலையிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கே உரிய தனிப்பட்ட பிரச்சனைகளும் சுசூழ்நிலைகளும் உள்ளன. நமது மாநிலத்தை எப்படிக் காக்க வேண்டும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்."
  • நமது மாநிலக் கண்ணியம் முக்கியம்: "அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும், நாம் நமது பணியைச் செய்வோம். அவர்களின் நிர்வாகத்தில் தலையிட நான் விரும்பவில்லை. அதேவேளையில் நமது மாநிலத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டியது நமது கடமை."

சம்பவத்தின் பின்னணி:

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், மானை வேட்டையாடியதாகக் கூறித் தமிழகத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), மற்றும் லாசர் குமார் (33) ஆகிய மூவரை அம்மாநில வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இச்சம்பவத்தைக் கண்டித்துப் போராட்டங்கள் வெடித்ததுடன் வனத்துறை அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் உடல்களும் இறுதித் திருப்பலிக்குப் பிறகு அவர்களின் சொந்த கிராமங்களில் அடக்கம் செய்யப்பட்டன.

இச்சம்பவம் குறித்துக் கர்நாடக அரசிடம் தமிழக அரசு உரிய விளக்கம் கேட்க வேண்டும் என்றும், இப்படுகொலை குறித்து சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியிருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் விதமாகக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இவ்வாறு பேசியுள்ளார்.




No comments

Thank you for your comments