முதலமைச்சரின் காப்பீட்டுத் தொகை ₹25 லட்சமாக உயர்வு! — சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
சென்னை | ஆகஸ்ட் 19, 2026
அப்போது பேசிய அவர், "ஒரு உயிரின் மதிப்பை அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவர், வசதியற்றவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான மருத்துவச் சேவை கிடைக்க வேண்டும் என்பதே நமது அரசின் முதன்மை நோக்கம்" என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு:
1. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் தொகை உயர்வு:
ஏழை எளிய மக்களுக்குப் பேரிடராக இருக்கும் மருத்துவச் செலவுகளைக் கட்டுப்படுத்த, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டொன்றுக்கு வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
2. வடசென்னையில் ₹300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை:
வடசென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகளுடன் கூடிய உலகத் தரத்திலான “பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை” (Multispecialty Super Speciality Hospital) அமைக்கப்படும்.
3. திருநங்கைகளுக்கான சிறப்பு சிகிச்சை விரிவாக்கம்:
சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கான மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சைகள் கூடுதலாக வழங்கப்படும்.
4. மருத்துவக் கல்வி & செவிலியர் இடங்கள் கணிசமான உயர்வு (₹351 கோடி):
- 2014-க்குப் பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத சூழலை மாற்றி, ரூ.351 கோடி மதிப்பீட்டில் புதிய இடங்கள் உருவாக்கப்பட உள்ளன:
- 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 660 B.Sc. செவிலியர் இடங்கள் உருவாக்கப்படும்.
- தற்போதைய செவிலியர் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் 1,925 கூடுதல் இடங்கள் சேர்க்கப்படும்.
- இயன்முறை மருத்துவம் (Physiotherapy) உட்பட 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,778 இடங்கள் உருவாக்கப்படும்.
- மருந்தியல் (Pharmacy) படிப்புகளில் 735 இடங்கள் உயர்த்தி, மொத்தம் 6,098 கூடுதல் மாணவர் இடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
₹673.44 கோடியில் “முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்”:
புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்கவும், அதிநவீன சிகிச்சைகளை வழங்கவும் ரூ.673.44 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது:
- ராஜீவ் காந்தி மருத்துவமனையில் G+14 தளம்:
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471.80 கோடி மதிப்பீட்டில் 14 தளங்களுடன் (G+14) ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
- 5 மண்டல புற்றுநோய் மையங்கள்:
தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் மண்டல மையங்கள் அமைக்கப்படும். முதற்கட்டமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ.84 கோடியில் G+8 தளங்களுடன் மையம் தொடங்கப்படும்.
- நவீன கருவிகள் & ரோபோடிக் சிகிச்சை:
ரோபோடிக் அறுவை சிகிச்சை, LINAC கதிர்வீச்சு மற்றும் நவீன நோயெதிர்ப்பு சிகிச்சைகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.106.17 கோடி வழங்கப்படும்.
- HPV DNA பரிசோதனை:
தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 1.22 லட்சம் பெண்களுக்கு ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறியும் HPV DNA பரிசோதனை மேற்கொள்ளப்படும்.


No comments
Thank you for your comments