Breaking News

வாலாஜாபாத் பேரூராட்சியில் தரமற்ற சிமெண்ட் சாலை, LED விளக்கு புறக்கணிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பரபரப்பு புகார்!

 காஞ்சிபுரம் | ஜூலை 30, 2026

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வாலாஜாபாத் பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி அ.தி.மு.க. பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரடி புகா மனு அளித்தனர்.

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் 2026
உச்ச குரு + புதாதித்ய யோகம்!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 3 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 

1. "விரைவில் சேதமடையும் அபாயம்" - 12-வது வார்டு கவுன்சிலர் குற்றச்சாட்டு:

வாலாஜாபாத் பேரூராட்சி 12-வது வார்டு மன்ற உறுப்பினர் திருமதி கீதாதேவி அரிக்குமார், மாவட்ட ஆட்சியர் தி. சினேகா ஐ.ஏ.எஸ். அவர்களிடம் அளித்த மனுவில் தெரிவித்ததாவது:

  • தரமற்ற சிமெண்ட் சாலை: வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட மரட்டியக்காரத் தெரு மற்றும் பி.கே. செட்டி தெரு பகுதிகளில் சமீபத்தில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலைகள் மிகவும் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளன.
  • முறைகேடு புகார்: பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து சில நாட்களிலேயே சிதைந்து சேதமடையும் நிலையில் இச்சாலைகள் உள்ளன. வாலாஜாபாத் பேரூராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளைச் செயல்படுத்துவதில் முறைகேடுகளும் ஊழலும் நடைபெற்று வருகின்றன.
  • ஆட்சியர் ஆய்வு செய்யக் கோரிக்கை: மாவட்ட ஆட்சியர் நேரடியாகத் தலையிட்டு இச்சாலைகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் நலன் கருதி தரமான முறையில் மீண்டும் புதிய சிமெண்ட் சாலைகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

2. அ.தி.மு.க. வார்டு என்பதால் புறக்கணிப்பா? - 14-வது வார்டு கவுன்சிலர் வேதனை:

வாலாஜாபாத் பேரூராட்சி 14-வது வார்டு மன்ற உறுப்பினர் திரு. அரிக்குமார் அளித்த மற்றொரு மனுவில் கூறியிருப்பதாவது:

இருளில் மூழ்கிய தெருக்கள்:

"எங்களது 14-வது வார்டு பகுதியில் முறையான எல்.இ.டி. (LED) தெருவிளக்குகள் அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இரவு வேளையில் வெளியில் நடமாடப் பெரிதும் அச்சப்படுகின்றனர்.

  • அரசியல் புறக்கணிப்பு: நான் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர் என்பதால் எங்களது வார்டு பகுதியைத் திட்டமிட்டே புறக்கணித்துவிட்டு, மற்ற அனைத்து வார்டுகளிலும் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • தரமற்ற உபகரணங்கள்: மற்ற பகுதிகளில் பொருத்தப்படும் எல்.இ.டி. விளக்குகளும் தரமற்ற முறையில் காணப்படுகின்றன. எனவே, ஆட்சியர் இதில் உடனடியாகக் கவனம் செலுத்தி, 14-வது வார்டில் தரமான எல்.இ.டி. மின்விளக்கு கம்பங்களை அமைத்து இரவு நேரங்களில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்."

வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அடுத்தடுத்துப் புகார் அளித்துள்ள சம்பவம் உள்ளாட்சி அமைப்புகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments