Breaking News

10 வயது சிறுவனின் ஆங்கிலக் கதைப்புத்தகம்: வியந்து பாராட்டிய காஞ்சி சங்கராசாரியார்!


 காஞ்சிபுரம் | ஜனவரி 19, 2026 :

சென்னையைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் ஒருவன் ஆங்கிலத்தில் கதைப்புத்தகம் எழுதியுள்ளதைக் கண்டு, காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அச்சிறுவனை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தார்.

யார் இந்தச் சிறுவன்?

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த கார்த்திக் - வீணா தம்பதியரின் 10 வயது மகன் சிரவன். சென்னையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வரும் இச்சிறுவன், சிறு வயதிலேயே எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் ஆங்கிலத்தில் கதைப்புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

சுவாமிகளிடம் ஆசி:

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது பெற்றோருடன் காஞ்சி சங்கர மடத்திற்கு வந்திருந்த சிரவன், தான் எழுதிய "Whispers of the Sea" (கடலின் கிசுகிசுக்கள்) என்ற ஆங்கிலக் கதைப்புத்தகத்தைச் சுவாமிகளிடம் காண்பித்து ஆசி பெற்றார்.

புத்தகத்தின் கதைக்கரு: ஒரு கடல் கொள்ளையன் மனம் மாறி, நல்லவனாக உருவெடுத்து கடற்படைக்கு உதவி செய்வது போன்ற விறுவிறுப்பான கற்பனைக் கதையை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. புத்தகத்தின் சுருக்கத்தைச் சிரவன் விவரித்ததைக் கேட்ட சுவாமிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.


அடுத்த படைப்பு:

மேலும், "தொட்டால் நறுமணம் தரும் அபூர்வப் பூ" என்ற தலைப்பில் மற்றுமொரு ஆங்கிலக் கற்பனைக் கதையைத் தான் எழுதி வருவதாகவும், விரைவில் அது வெளியாகவுள்ளதாகவும் அச்சிறுவன் சுவாமிகளிடம் தெரிவித்தார்.

சுவாமிகளின் வாழ்த்து:

சிறுவனின் அபாரமான கற்பனைத் திறனையும், ஆங்கிலப் புலமையையும் வியந்து பாராட்டிய காஞ்சி சங்கராசாரியார்:

"தொடர்ந்து நல்ல புத்தகங்களை எழுது; சமுதாயத்திற்குச் சேவை செய்யக்கூடிய உயர்ந்த மனிதராக நீ வளர வேண்டும்"

என்று வாழ்த்தி, பொங்கல் திருநாளை முன்னிட்டு மஞ்சள் கொத்து மற்றும் கரும்பு ஆகியவற்றைச் சிறுவனுக்கு வழங்கி ஆசீர்வதித்தார்.

இந்நிகழ்வின் போது சங்கர மடத்தின் மூத்த மேலாளர் ந. சுந்தரேச ஐயர், மேலாளர் அரவிந்த் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments