குருவிமலை நரிக்குறவர் இன மக்களுக்கு விஹெச்பி சார்பில் நலத்திட்ட உதவிகள்: காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகர் பங்கேற்பு!
காஞ்சிபுரம் | ஜனவரி 18, 2026
வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்:
குருவிமலை கிராமத்தில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனக் குடும்பங்களுக்கு:
இலவச வேட்டி மற்றும் சேலைகள்.
புத்தாண்டு நாட்காட்டிகள் (Calendars).
சுவாமி படங்கள். ஆகியவை ஞாவாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.
நிர்வாகிகள் பங்கேற்பு:
இந்த விழாவிற்கு விஹெச்பி தலைவர் ந. சிவானந்தம் தலைமை வகித்தார். விஹெச்பி வட தமிழக அமைப்பு செயலாளர் ராமன்ஜி மற்றும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகர் நடராஜ சாஸ்திரிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
கோட்ட செயலாளர் கிருபானந்தம், பஜ்ரங்தள் மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் பச்சையப்பாஸ் சில்க்ஸ் அலுவலர் பார்த்தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாத்ரு சக்தி நிர்வாகி ரேவதி அனைவரையும் வரவேற்றார்.
ஸ்தானீகர் நடராஜ சாஸ்திரிகளின் உறுதிமொழி:
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்தானீகர் நடராஜ சாஸ்திரிகள் நரிக்குறவர் இன மக்களின் உழைப்பை வெகுவாகப் பாராட்டினார்:
"நரிக்குறவர் இன மக்கள் யாரிடமும் பிச்சை எடுக்காமல், ஊசி மற்றும் பாசி விற்று கௌரவமாகப் பிழைப்பு நடத்தும் உண்மையான உழைப்பாளிகள். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் ஒழுக்கமானவர்கள். இந்த மக்களுக்கு மத்திய அரசுத் திட்டம் மூலம் தலா ரூ. 3.25 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டித் தர உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும், இவர்களின் குழந்தைகளின் கல்விக்கும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்."
நிறைவாக, குருவிமலை நரிக்குறவர் இன மக்கள் தலைவர் சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
No comments
Thank you for your comments