விருத்தாசலத்தில் தேமுதிகவின் பிரம்மாண்ட 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0'! பந்தல் பணிகளை ஆய்வு செய்தார் பிரேமலதா விஜயகாந்த் - "வெற்றி தரும் மாற்றம் வரும்!"
விருத்தாசலம்/வேப்பூர் | ஜனவரி 5, 2026
குடும்பத்துடன் ஆய்வு: இந்த ஆய்வின் போது தேமுதிக பொருளாளர், மாநில இளைஞரணி செயலாளர் விஜய் பிரபாகரன் மற்றும் நடிகர் சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். மாநாட்டு மேடை, தொண்டர்களுக்கான இருக்கை வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்ட பிரேமலதா விஜயகாந்த், பணிகளை விரைவில் முடிக்க நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: "கேப்டனின் ஆசிர்வாதத்துடன் நடைபெறவிருக்கும் இந்த 2.0 மாநாடு, தமிழக அரசியலில் மிகப்பெரிய எழுச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஒளிமயமான எதிர்காலம் அமையும்.
கூட்டணி குறித்து: கூட்டணி குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் கருத்துக்களைக் கேட்டுள்ளோம். தேமுதிகவிற்கு என்று ஒரு தனி மரியாதை இருக்கிறது. கேப்டன் தன் உயிரைக் கொடுத்து வளர்த்த இந்தக் கட்சிக்குரிய இடத்தை நிச்சயம் பெறுவோம். கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள் என்ற கேள்விக்கு, '234 தொகுதிகளையும் கேட்பேன்' எனச் சிரித்தபடி பதிலளித்தார். கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநாட்டில் வெளியிடுவேன்.
விருத்தாசலத்தின் மீதான பாசம்: கேப்டனுக்கு முதல் வெற்றியைத் தந்த விருத்தாசலம் தொகுதி, என்றும் எங்கள் நெஞ்சில் இருந்து அகலாத ஒரு தொகுதி. இந்த மண்ணில் நடக்கும் மாநாடு நிச்சயம் ஒரு மைல்கல்லாக அமையும்."
செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.
No comments
Thank you for your comments