விருத்தாசலத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாம்: நேரில் ஆய்வு செய்து அ.தி.மு.க முகவர்களுக்கு எம்.எல்.ஏ அருள்மொழித்தேவன் ஆலோசனை!
விருத்தாசலம் | டிசம்பர் 27, 2025
ஆய்வு மற்றும் ஆலோசனை:
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமிற்குச் சென்ற எம்.எல்.ஏ அருள்மொழித்தேவன், அங்கு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் போன்ற பணிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, இக்கப்பணியில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க முகவர்களைச் சந்தித்த அவர், தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், பிழையில்லாத பட்டியலைத் தயார் செய்யத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.
பிற மையங்களில் ஆய்வு:
அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தொரவளூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
பங்கேற்ற நிர்வாகிகள்:
இந்த ஆய்வின் போது அ.தி.மு.க நகரச் செயலாளர் சந்திரகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநில இணைச் செயலாளர் அருளழகன், மற்றும் நிர்வாகிகள் மணிவண்ணன், ராமச்சந்திரன், கண்ணன், பன்னீர்செல்வம், அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.
No comments
Thank you for your comments