Breaking News

விருத்தாச்சலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை – கணக்கில் வராத பணம் பறிமுதல்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சல த்தில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்சம் வசூலிப்பு நடைபெறுகிறது என்ற தகவல் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கிடைத்ததைத் தொடர்ந்து, திடீர் சோதனை நடத்தப்பட்டது.

 

அதில்,

  • அலுவலர்கள் மற்றும் இடைத்தரகர்கள் வழியாக முறைகேடாக லஞ்சம் வசூலிக்கப்பட்டது,
  • அலுவலக நேரத்தை கடந்தும் இரவு நேரங்களில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வந்தது,
என்ற குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உள்ளன.

நேற்று இரவு சுமார் 8 மணிக்கு,
துணை சூப்பிரண்டு அழகேசன் தலைமையில் 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்துக்குள் நுழைந்து சுமார் 4 மணி நேரம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த சோதனையில், 

👉 கணக்கில் வராத ₹2,22,900 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையில், இரவு நேரங்களில் லஞ்ச ஒழிப்பு துறையின் திடீர் சோதனையால் அந்தப் பகுதிலும் பத்திரப்பதிவு ஆவணங்கள், பண பரிமாற்றம் உள்ளிட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!



















No comments

Thank you for your comments