Breaking News

காஞ்சிபுரத்தில் தொழிற்பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் - ஆட்சியர் வழங்கினார்

காஞ்சிபுரம், டிச.1

காஞ்சிபுரத்தில் தொழிற்பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை மத்திய அரசின் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி நிறுவனமும்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இணைந்து அறிவு சார் குறைபாடுடைய மற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியரின் வாழ்வாதாரத்தை உயர்த்திட முதற்கட்டமாக 30 மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன.

 

ஊதுபத்தி, பினாயில் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க கற்றுக் கொடுக்கப்பட்டது .பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இரு வேளை உணவு, தேநீர் போன்றவையும் பயிற்சி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அ.திலீப்,பயிற்சி மையத்தின் இயக்குநர் உமாபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பயிற்சி மைய பணியாளர் ரமேஷ் வரவேற்று பேசினார்.

மாற்றுத்திறனாளிக்கு தேவையான பரிசுப் பொருட்கள்,மதிய உணவு, தேநீர ஆகியன முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. பயிற்சி மைய பணியாளர் ரமேஷ் நன்றி கூறினார்.நிகழ்வில் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

  .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்! 

நல்ல பலன்களை பெற என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?



























No comments

Thank you for your comments