⚖️ இ-ஃபைலிங் முறையை ரத்து செய்யக் கோரி: விருத்தாசலம் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு! - தலைமை அஞ்சலகம் முன் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம், டிசம்பர் 16, 2025:
📣 ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் புஷ்பதேவன் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர்கள் அம்பேத்கர், விஜயகுமார், மணிகண்ட ராஜன், அருள்குமார், சிவக்குமார், வடிவேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, இ-ஃபைலிங் முறையைக் கட்டாயம் ஆக்குவதால் ஏற்படும் சிரமங்களை வலியுறுத்தி, கண்டனக் கோஷங்கள் எழுப்பினர்.
✉️ சுற்றறிக்கைத் திருப்பி அனுப்பும் போராட்டம்
இ-ஃபைலிங் நடைமுறைப்படுத்துவது குறித்து உயர் நீதிமன்றப் பதிவாளரால் அனுப்பப்பட்டிருந்த சுற்றறிக்கை நகலை, ரத்து செய்ய வலியுறுத்தி, விருத்தாசலம் தலைமைத் தபால் நிலையத்திற்கு வந்து அதனை மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பும் நூதனப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
வழக்கறிஞர்களின் இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலித்து, இ-ஃபைலிங் முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் விருத்தாசலம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்புக்கு: R. காமராஜ் - 9080215691

No comments
Thank you for your comments