விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் இரவு நேர பேருந்து நிறுத்தம் – விபத்து அபாயம் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
விருத்தாசலம்:
இரவு நேரங்களில், குறிப்பாக இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை, இந்தப் பேருந்துகளுக்கு பணிமனையில் உள்ள டீசல் பங்கில் டீசல் நிரப்பப்படுகிறது. டீசல் நிரப்ப வரிசையில் நிற்கும் பேருந்துகள், ஜங்ஷன் சாலையின் இருபுறத்திலும் நிறுத்தப்படுவதால், அந்தச் சாலையில் இயங்கும் பிற வாகனங்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுகிறது.
இதனால்,
- பிற வாகன ஓட்டிகள் நெரிசலை கடக்க முயலும் போது
- சாலையின் அகலம் குறைவதால்
- ஒளி குறைவான இரவு நேரத்தில்
விபத்துகள் ஏற்படுகின்றன எனவும், இன்னும் பல விபத்துகளுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும்,
“இது போன்ற ஆபத்தான முறையை உடனடியாக நிறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு டீசல் நிரப்ப Alternate System அமைக்க பணிமனை மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.
இத்தகவல் பரவி வரும் நிலையில்,
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் இந்த பிரச்சாரத்தை கவனிக்கிறாரா? என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

No comments
Thank you for your comments