Breaking News

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் கருத்தரங்கம்


காஞ்சிபுரம், டிச.12:

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியும்,யங் இந்தியன்ஸ் அமைப்பும் இணைந்து கல்லூரி வளாகத்தில் ஆரோக்கியம், பொருளாதாரம்,தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட தலைப்புகளில் வெள்ளிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கை கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். 

யங் இந்தியன்ஸ் அமைப்பினை சேர்ந்த விஜய் ஆதித்தன், பிரசாந்த்,பிரசன்னா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.


காஞ்சிபுரம் பிரிவின் தலைவர் ஜெயவிக்னேஷ் வரவேற்று பேசினார். கருத்தரங்கில் ஆரோக்கியம்,பொருளாதாரம்,தொழில் முன்னேற்றம் போன்ற தலைப்புகளில் 8-க்கும் மேற்பட்ட அத்துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்கவுரை நிகழ்த்தினர்.

கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசனுக்கு யங் இந்தியன்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் நினைவுப்பரிசும் வழங்கினர்.



Rasi Palan

🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்

நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்..  பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும்  | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇

 

No comments

Thank you for your comments