வேப்பூரில் பயிர் காப்பீடு வழங்க கோரி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம் – பரபரப்பு!
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததை எதிர்த்து, விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காப்பீடு செய்த பயிர்கள் நாசம் – இன்றளவும் தொகை இல்லை
வேப்பூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மக்காச்சோளம், மரவள்ளி, நெல், கம்பு, வரகு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
கடந்த ஆண்டு மக்காச்சோளம் பயிருக்கு அவர்கள் பயிர் காப்பீடு செய்திருந்தனர்.
அந்த ஆண்டில் பெய்த மழையால் இந்தப் பயிர்கள் முழுமையாக நாசமானதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர்.
ஒரு ஆண்டாகியும், மக்காச்சோளம் மற்றும் நெற்பயிருக்கான காப்பீட்டுத் தொகை தமிழ்நாடு அரசு வழங்காதது விவசாயிகளில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பலமுறை மனுக்கள் – பதில் இல்லை, அதனால் அரைநிர்வாண போராட்டம்
இந்த கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் பல்வேறு முறை மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்காததால் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில்
- பெரியநெசலூர் கவியரசு
- வரம்பனூர் ராஜா
- காஞ்சிராங்குளம் ஸ்டாலின்
- ரெட்டாகுறிச்சி மணிண்டன்
ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேப்பூர் பஸ் நிலையத்திலிருந்து கோஷமிட்டபடி வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அங்கு சென்று, அரைநிர்வாணமாக உட்கார்ந்து சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் தலையீடு – 15 நாட்களில் தொகை வழங்கப்படும் என உறுதி
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், வேப்பூர் மண்டல துணை வட்டாட்சியர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், நல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, இன்சூரன்ஸ் கம்பனி நிர்வாகிகள் விவசாயிகளுடன் பேசிக் கலந்துரையாடினர்.
இதன் முடிவில், 15 நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் காப்பீட்டுத் தொகை அனுப்பப்படும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் உறுதியளித்தனர்.
இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தி அமைதியாக கலைந்தனர்.
📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!

No comments
Thank you for your comments