தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில மையம் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் ...!
கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில மையம் சார்பில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் மாபெரும் மறியல் போர். மாபெரும் மறியல் போரில் தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், இதனால் தமிழ்நாடு அரசு ஊழியர் பல லட்சம் பேர் ஏமாற்றப்பட்டோம் என்று, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் மறியல் போர் செய்தனர்.
2021 ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி பதவி ஏற்று கொண்ட திமுக தலைமை யிலான தமிழக அரசு,கடந்த நாலரை வருடங்களில் பொதுமக்களுக்கும், அரசு ஊழியருக்கும், ஆசிரியர்களுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகளில் 99 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முன்வைத்த பழைய பென்ஷன் திட்டம் வழங்காதது, சத்துணவு, அங்கன்வாடி,வருவாய் கிராம ஊழியர்கள், ஊர் புற நூலகர்கள், MRP செவிலியர்கள், உள்ளிட்ட சிறப்பு கால முறை தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியத்தினை வழங்கி, அவர்களுக்கு சட்டபூர்வமான ஓய்வூதியம் வழங்காதது, சாலை பணியாளர்களின் 41 மாத காலத்தினை நீதிமன்ற உத்தரவினை ஏற்று பணிக்காலமாக அறிவிக்காதது, கடந்த ஏழாவது ஊதிய குழு நிலவையாக உள்ள 21 மாத நிலுவைத் தொகை வழங்காதது, அரசு பள்ளிகளில் நடைமுறையில் உள்ள முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தினை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களைக் கொண்டே அமல்படுத்தாதது, மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைத்து யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்தாதது,உள்ளிட்ட கோரிக்கைகளை இன்றும் அப்படியே வைத்துள்ளதாக தமிழக அரசு மீது குற்றம் சாட்டியும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோரை அரசு ஊழியர்கள் ஆக்க வேண்டும் என்றும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மறியல் போராட்டத்தை கையில் எடுத்தனர். மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் போராட்டத்தை சற்றும் கண்டு கொள்ளாத தமிழ்நாடு அரசை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்களுமான ஆண்கள் மற்றும் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவல் துறை 150-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
செய்தியாளர்: லீலாகிருஷ்ணன்📱
99942 55455

No comments
Thank you for your comments