Breaking News

தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை பூமி பூஜை...!

கோவை மாவட்டம் உக்கடம் மண்டல் பாஜக சார்பில்  தெற்கு சட்டமன்ற தொகுதி வார்டு எண் 80-க்கு உட்பட்ட  சாவித்திரி நகர் பகுதியில் 2025 2026 தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 இலட்சம் மதிப்பீட்டில்  புதிய நியாய விலை கடை அமைப்ப தற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும்  கோவை தெற்கு மன்ற சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு உக்கடம் மண்டல் தலைவர் கமல்நாத் முன்னிலையில் பூமி பூஜையை துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சேகர்,தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் சுப்ரமணி, சக்தி கேந்திரா பொறுப்பாளர் கிருபாகரன்,உக்கடம் மண்டல் மகளிர் அணி தலைவர் ஆனந்தி மணிகண்டன், துணைத் தலைவர் லாவண்யா, பொதுச் செயலாளர் சுபா, சரண்யா, பொருளாளர் விணிலா மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:லீலாகிருஷ்ணன்📱

99942 55455

No comments

Thank you for your comments