Breaking News

ஸ்ரீ பினாயூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் – 2148 பேருக்கு பிரியாணி வழங்கிய எம்.எல்.ஏ. சுந்தர்



காஞ்சிபுரம் : 

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீ பினாயூர் ஊராட்சி மன்ற தலைவர் தென்மொழி மணி மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணி அவர்களின் ஏற்பாட்டில் பெருமளவிலான சமூகநல நிகழ்ச்சி நடைபெற்றது.


காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி. குமார் முன்னிலையில், மாம்பாக்கம், திருவனந்தார் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு மொத்தம் 2148 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

இந்த நலத்திட்டப்பணியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ. க. சுந்தர் அவர்கள் தலைமையாக பங்கேற்று, பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணி, மாவட்ட கவுன்சிலர் சிவராமன், ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், வெங்கடேசன், திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை சமூகநலச் செயலாக மாற்றிய திமுக நிர்வாகிகளின் ஒற்றுமையையும் மக்கள் பங்கு பற்றலையும் வெளிப்படுத்தியது.

No comments

Thank you for your comments