காஞ்சிபுரத்தில் ஆன்மீக நூல் வெளியீட்டு விழா
காஞ்சிபுரம், டிச.10:
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் உள்ள திருமேற்றலீசுவரர் ஆலயத்தில் திருவைகுந்த காளத்தியப்பர் பிரபந்த மாலை என்ற ஆன்மீக நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திருமேற்றலீசுவரர் ஆலயத்தில் ஆசிரியர் ஸ்ரீ கருணா அமுதசுவாமி எழுதிய திருவைகுந்த காளத்தியப்பர் பிரபந்த மாலை என்ற ஆன்மீக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை நிடுமாமிடிமடத்தின் மடாதிபதி விரேஸ்வர தேசிகேந்திர சுவாமிகள் தலைமை வகித்து நூலை வெளியிட்டார். நூலின் பிரதிகளை மருத்துவர் ஜெ.பரணீதரன், ஆர்.ராம்நாத்,எஸ்.பார்த்தசாரதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாக்குழு நிர்வாகிகள் கே.சோமசுந்தரம், இ.தனபால்,ஏ.ஏகாம்பரம், எஸ்.பார்த்தீபன், இ.எல்லம்மாள் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் ஓதுவார் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனப் புலவர் சரவணசதாசிவம், பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எம்.வஜ்ரவேலு ஆகியோர் நூலை அறிமுகம் செய்து பேசினார்கள்.
நிறைவாக திருவாடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்த பயிற்சி மைய அமைப்பாளர் இ.சுந்தரேசன் நன்றி கூறினார்
.
No comments
Thank you for your comments