Breaking News

காஞ்சிபுரத்தில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.34 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்


காஞ்சிபுரம், டிச.10:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 39 பயனாளிகளுக்கு ரூ.6.34 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.



காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமயில் அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது.

எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 39 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது..

ஆண்டு தோறும் டிசம்பர் 3 ஆம் தேதிய அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமூகம், பொருளாதாரம்,அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கை ஆகியன குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு  வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவே இவ்விழா டிச.3 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியன நடத்தப்பட்டு அவர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணரவும் விழா நடத்தப்படுகிறது என்றார்.

விழாவில் 3 பேருக்கு ரூ.3.15 லட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 10 பேருக்கு ரூ.1.30 லட்சம் மதிப்பில் திறன் பேசிகள், 3 பேருக்கு ரூ.36 ஆயிரம் மதிபில் 3 சக்கர வண்டிகள், 5 பேருக்கு ரூ.47 ஆயிரம் மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகள், 10 பேருக்கு ரூ.30,000 மதிப்பிலான காதொலிக்கருவிகள் உட்பட மொத்தம் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.34 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

No comments

Thank you for your comments