Breaking News

ஸ்ரீபெரும்புதூரில் 95 சவரன் நகை, ரூ.21 லட்சம் திருட்டு வழக்கு – இரு குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

 ஸ்ரீபெரும்புதூர் S.J. நகர் பகுதியில் வசிக்கும் திரு. முத்துபெருமாள் த/பெ. சுப்பையன் அவர்கள் வீட்டில் கடந்த 26.05.2025 அன்று இடம்பெற்ற பெரிய திருட்டு வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் இன்று தண்டனை வழங்கியுள்ளது.



அன்று அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 95 சவரன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி பொருட்கள், மற்றும் ரூ.21,00,000/- பணத்தை திருடிச் சென்றனர். இதனையடுத்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் குற்றவழக்கு எண் 318/2025 u/s 331(4), 305(a) BNS என பதிவு செய்யப்பட்டது.


வழக்கை வேகமாக முடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமான புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதன் மூலம்

1) விஜயகுமார் (31) த/பெ. கணபதி, நெ.36, பெருமாள் கோயில் தெரு, அய்யநல்லூர் கண்டிகை கிராமம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம்

2) கார்த்திக் (22) த/பெ. கோபி, கீழான் தெரு, காரூர் கிராமம், நெல்லூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்

என இருவரும் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இருவரும் நீதிமன்ற அடைக்கலத்தில் வைக்கப்பட்டனர்.



இவ்வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 09.12.2025, இருவரும் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் திரு. விக்னேஷ் அவர்கள்முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


நீதிமன்றம் இருவரும் குற்றம் புரிந்தது நிரூபணமாகும் எனத் தீர்ப்பளித்து,

தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை
ரூ.10,000/- அபராதம்

அபராதம் செலுத்தப்படாவிடில் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை

என தண்டனை விதித்தது.

இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் திரு. தர்மலிங்கம் மற்றும் நீதிமன்ற காவலர் திரு. மணிகண்டன் ஆகியோரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. K. சண்முகம் அவர்கள் பாராட்டியுள்ளார்.


Rasi Palan

🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்

நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்..  பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும்  | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇

 

No comments

Thank you for your comments