Breaking News

புதிய கிரேட் ஸ்லீப் ஸ்டோர் தொடக்கம் தனது ரீடெய்ல் செயல் பாட்டை விரிவாக்கும் பெப்ஸ் மேட்ரெஸ் ...!

கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது புதிய பெப்ஸ் கிரேட் ஸ்லீப் ஸ்டோரினை தொடங்கி தனது ரீடெய்ல் வலையமைப்பை மேலும் விரிவு படுத்தியுள்ளது .இந்த ஸ்டோரினை நிறுவனத்தின் துணைத் தலைவர் C.N. ராஜேஷ் திறந்து வைத்தார்.



சுமார் 1100 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள புதிய ஸ்டோர், ஒரு அனுபவ ரீதியான ஸ்லீப் ஸ்டுடியோவாக செயல்படுகிறது. இங்கு ஸ்பிரிங், ஃபோம் மற்றும் காயர் மெத்தைகள், ப்ரீமியம் தலையணைகள், மெத்தை பாதுகாப்பு உறைகள் மற்றும் உறக்க துணைப் பொருட்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளை நேரடியாக பரிசோதித்து, பயிற்சி பெற்ற பணியாளர்களிடம் விளக்கங்களைப் பெற்று, தங்களுக்கான சரியான உறக்கத் தீர்வுகளை தேர்வு செய்ய முடியும். இந்த ஆண்டு அறிமுகமான பெப்ஸ் கம்ஃபர்ட், பெப்ஸ் சுப்ரீம், பெப்ஸ் ரெஸ்டோனிக் மெமரி ஃபோம், பெப்ஸ் சுப்ரீயர் ஸ்பிரிங் போன்ற நான்கு மேம்படுத்தப்பட்ட தயாரிப்புத் தொடர்களும் இங்கு கிடைக்கின்றன.



இந்தியாவில் 5,000-க்கும் மேற்பட்ட மல்டி-பிராண்ட் விற்பனையகங்களும் 91 பிரத்யேக ஸ்டோர்களும் கொண்ட பெப்ஸ், வருங்காலத்தில் மேலும் பல நகரங்களில் தனது ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்களை’ தொடங்கத் திட்டமிட்டுள்ளது. கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், ‘மார்வெலஸ் மிடில் ஸ்பைன் கார்டு’, ‘ஜீரோ டிஸ்டர்பன்ஸ்’ போன்ற காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களையும், இந்தியாவின் முதல் இன்னர்ஸ்பிரிங் மெத்தை எனப்படும் ‘ஸ்பைன் கார்டு’ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருகிறது.இந்நிகழ்ச்சியில் பெப்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் ,ஸ்டோர் உரிமையாளர் அவரது குடும்பத்தினர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

📝 செய்தியாளர்:லீலாகிருஷ்ணன்📱 99942 55455

No comments

Thank you for your comments