காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்குக் கொண்டாட்டம்: 1,112 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய எழிலரசன் எம்.எல்.ஏ!
காஞ்சிபுரம் | டிசம்பர் 23, 2025
திட்டத்தின் பின்னணி:
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 62 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மொத்தம் 9,081 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கான விழா நடைபெற்றது.
2026-ம் ஆண்டு: குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை | 2026 Career & Finance Horoscope|
7 பள்ளிகள் - 1,112 பயனாளிகள்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள மரிய ஆக்ஸிலிசம், ராணி அண்ணாதுரை, டாக்டர் பி.எஸ்.எஸ், எம்.எஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.எம், தண்டபாணி ஓரியண்டல் மற்றும் கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
எம்.எல்.ஏ எழிலரசன் உரை:
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வி.எம்.பி. எழிலரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 1,112 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில், "திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. மாணவர்கள் இந்த நலத்திட்டங்களை முறையாகப் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.
பங்கேற்றோர்:
இந்த விழாவில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) நளினி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments