Breaking News

காஞ்சிபுரத்தில் பரபரப்பு: "எங்கள் ஊரிலேயே பூத் வேண்டும்!" - உயர் நீதிமன்ற உத்தரவுடன் ஆட்சியரிடம் மனு அளித்த இலப்பை கண்டிகை மக்கள்.

 

 காஞ்சிபுரம் | டிசம்பர் 23, 2025

காஞ்சிபுரம் மாவட்டம் இலப்பை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட சிறுபான்மையின வாக்காளர்கள், தங்கள் கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு நகலுடன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.



20 ஆண்டுகால அவதி: காஞ்சிபுரம் அடுத்த வளத்தூர் கிராம ஊராட்சியில் உள்ள இலப்பை கண்டிகை பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2002-ஆம் ஆண்டு வரை இந்தப் பகுதியிலேயே வாக்குச்சாவடி மையம் செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இங்கிருந்த வாக்குச்சாவடி 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வளத்தூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டது.

தேர்தல் நேரப் பிரச்சனைகள்: ஒவ்வொரு தேர்தலின் போதும் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வாக்கு செலுத்துவது முதியவர்கள் மற்றும் பெண்களுக்குப் பெரும் சிரமமாக இருந்து வருகிறது. இதனால், அரசியல் கட்சியினர் வாக்காளர்களைத் தங்கள் வாகனங்களில் அழைத்துச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இது தேர்தல் நேரத்தில் தேவையற்ற மோதல்களுக்கும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் வழிவகுப்பதாகக் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

2026-ம் ஆண்டு: குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை | 2026 Career & Finance Horoscope|  @K24AstroTv 

நீதிமன்றத்தை நாடிய மக்கள்: இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இலப்பை கண்டிகை கிராம மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.


ஆட்சியரிடம் கோரிக்கை: இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் (திங்கட்கிழமை மனுநீதி நாள்) கூட்டத்திற்கு 200-க்கும் மேற்பட்ட சிறுபான்மையின மக்கள் திரண்டு வந்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரியான திருமதி. கலைச்செல்வி மோகன் அவர்களிடம் உயர் நீதிமன்ற உத்தரவு நகலை வழங்கி, வரும் தேர்தல்களில் தங்கள் கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்க உத்தரவை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

No comments

Thank you for your comments