Breaking News

வாலாஜாபாத் அகத்தியா பள்ளியில் உணவுத் திருவிழா


காஞ்சிபுரம், டிச.2:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவிற்கு பள்ளியின் செயலாளர் சாந்தி அஜய்குமார் தலைமை வகித்தார்.பள்ளி முதல்வர் சந்தியா முன்னிலை வகித்தார். 

 

ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவே எதிர்காலத்தை பாதுகாக்கும் என்ற கருத்தை மையமாக வைத்து உணவுத் திருவிழா நடைபெற்றது.

துரித உணவுகளால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மண்பாண்ட சமையல், சிறுதானிய உணவுகள்,மாவுச்சத்து நிறைந்த உணவு,காய்கறி மற்றும் கீரை சார்ந்த உணவுகளின் அவசியம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

பள்ளியில் 27 வகுப்பறைகளில் உணவுக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் 500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பல்வேறு வகை உணவுகளை தங்கள் கைகளாலேயே தயாரித்து தனித்துவமான முறையில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

உணவுக் கண்காட்சியில் சிறப்பாக சிறு தானிய உணவுகளை தயாரித்தவர்கள் நடுவர்கள் குழுவால் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

  .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்! 

நல்ல பலன்களை பெற என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?


























No comments

Thank you for your comments