டிச.6,காஞ்சிபுரம் வருகை தரும் சங்கர மடத்தின் பீடாதிபதிகளுக்கு உற்சாக வரவேற்பு
காஞ்சிபுரம், டிச.2:
மும்பை, புனே, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் கும்பாபிஷேத்தை நடத்தி வைத்து விட்டு டிசம்பர் 6 ஆம் தேதி காஞ்சிபுரம் வருகை தரும் சங்கர மடத்தின் பீடாதிபதிகளுக்கு நகரின் எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி காஞ்சிபுரம் வருகை தரவுள்ளனர். இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது..
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஹதராபாத்,மும்பை,புனே,கும்பகோணம் ஆகிய ஊர்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து விட்டும்,மற்ற முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றுக் கொண்டு திருப்பதி வந்தடைந்தார்கள்.
வரும் டிசம்பர் 6 ஆம் தேதி சனிக்கிழமை காலையில் சர்வதீர்த்தக்குளம் அருகே நகர் எல்லையில் உள்ள தவளேசுவரர் கோயில் முன்பாக பாரம்பரிய முறைப்படி பீடாதிபதிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகர்கள் மற்றும் நகர் வரவேற்புக் குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதனையடுத்து ஸ்ரீ மடத்தின் நுழைவுவாயிலில் பூரண கும்ப மரியாதையுடன்வரவேற்பதுடன் நகர் முக்கியப் பிரமுகர்களும் வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
டிசம்பர் 6 ஆம் தேதி முதல் சந்திர மௌலீசுவரர் பூஜையும் தொடர்ந்து நடத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து அன்று மாலை 3 மணியளவில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில் சமர்ப்பிக்கப்படும் தங்கத்தேர் வெள்ளோட்ட விழாவிலும் பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ளார்கள் எனவும் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
நல்ல பலன்களை பெற என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?
No comments
Thank you for your comments