Breaking News

விருத்தாசலத்தில் சீமானின் கார் வழிமறிப்பு – நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

 

விருத்தாசலம் | கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் இருபது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


மாநாடு முடிந்து, அவர் தனது காரில் புறப்பட்டுச் சென்றபோது, மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சீமானின் காரை வழிமறித்து, ஏக வசனத்தில் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சீமான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த சம்பவத்தை கண்டித்து, அந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் விருத்தாசலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல் துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதன் பேரில், கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


இந்த சாலை மறியல் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, போக்குவரத்தை மீண்டும் சீர்செய்தனர்.



No comments

Thank you for your comments