வடலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் - டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி–எஸ்.டி தொழிலாளர் நல சங்கம் பெயர் பலகை திறப்பு விழா
கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில், டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி–எஸ்.டி தொழிலாளர் நல சங்கம் புதிய பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, சங்கத்தின் மாநில பொருளாளர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர் பங்கேற்பு
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் குமார் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் – வடலூர் பணிமனையில் அமைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி–எஸ்.டி தொழிலாளர் நல சங்கத்தின் புதிய பெயர் பலகையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து, டிராவல் பேக் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முன்னிலை வகித்த நிர்வாகிகள்
இந்நிகழ்ச்சியில்,
கடலூர் மாவட்ட அரசு ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் பரமேஸ்வரன்,
சங்கத்தின் கௌரவத் தலைவர் மற்றும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திரு. மார்பன்,
மாநில பொதுச் செயலாளர் ரவி,
துணைத் தலைவர் புகழேந்தி,
மாவட்டத் தலைவர் பிரபாகரன்,
மாநில தலைவர் ராஜசேகரன்,
மாநில பரிசோதனை பிரிவு தலைவர் சின்னசாமி,
மாநில அமைப்பு செயலாளர் சாலமன் ராஜா,
தகவல் மற்றும் பாதுகாப்பு பிரிவு தலைவர் கல்யாணகுமார்,
மாநில இணை பொதுச் செயலாளர் கந்தசாமி,
மாநில துணைநிலை செயலாளர் சங்கர்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல, பணிமனை நிர்வாகிகள் பங்கேற்பு
மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
கடலூர் மண்டல பொறுப்பாளர்கள் –
மண்டல பொதுச் செயலாளர் ஜெகதீசன்,
மண்டல தலைவர் ராமமூர்த்தி,
மண்டல பொருளாளர் பாலகுமார்,
மண்டல அமைப்புச் செயலாளர் பாபு,
மண்டல தலைமையகம் செயலாளர் செல்வகுமார்,
வடலூர் பணிமனை பொறுப்பாளர்கள் –
பணிமனை தலைவர் செங்குட்டுவன்,
பணிமனை செயலாளர் சந்திரகுமார்,
பணிமனை பொருளாளர் செல்வம்,
பணிமனை அமைப்பாளர் ஜோதிவேல்,
பொதுக்குழு உறுப்பினர் முருகன்,
செயற்குழு உறுப்பினர் வரதராஜன்,
பணிமனை ஓட்டுநர் செயலாளர் ராமலிங்கம்,
பணிமனை நடத்துனர் செயலாளர் ராஜேந்திரன்
உள்ளிட்ட வடலூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி–எஸ்.டி தொழிலாளர் நல சங்கத்தின் நிர்வாகிகள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments