காஞ்சிபுரம் – ஜெயலலிதா நினைவு தின நிகழ்வு - ஆர்.வீ. இரஞ்சித்குமார் தலைமையில் அன்னதானம் வழங்கல்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை போற்றும் வகையில், காஞ்சிபுரம் முக்கியால்பேட்டை பகுதியில் இன்று மரியாதை நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வை மாவட்ட செயலாளர் ஆர்.வீ. இரஞ்சித்குமார் தலைமையில் காஞ்சிபுரம் அஇஅதிமுக உரிமை மீட்பு குழு மற்றும் பல நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் அனுசரிக்கப்பட்டது.
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அவர்களின் ஆணைக்கிணங்க, நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அங்கு கூடிய ஏழை மற்றும் எளிய மக்களுக்கு இட்லி, வடை, பொங்கல், கேசரி அன்னதானமாக வழங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்டோர்
- அமைப்பு செயலாளர் கே. கோபால்
- மாவட்ட நிர்வாகிகள் ஏ. வஜ்ரவேலு, ஷகிலா
- ஒன்றிய செயலாளர்கள் ஏ. மாலிக் பாஷா, கோவிந்தராஜ், அருண், மாகறல் சசி
- பேரூராட்சி செயலாளர்கள் வாலாஜாபாத் ஜெயகாந்தன், குலசேகரன்
- மாவட்ட அணி செயலாளர் ராஜ்குமார், படப்பை பாபு, பூக்கடை ஜகா, சாந்தி, சந்திரசேகரன், தினேஷ், அமுல், சோபா, தனலட்சுமி, மதன், பூச்சிவாக்கம் செல்வம், விமல், காமாட்சி கான், விஜயன், நிக்ஸன், ஜெயபிரகாஷ்
நிகழ்ச்சி, முன்னாள் தமிழக முதலமைச்சர் மற்றும் முன்னாள் எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க, பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
.📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
நல்ல பலன்களை பெற என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?
No comments
Thank you for your comments