Breaking News

ஜோய் ஆலுக்காஸில் "பிரில்லியன்ஸ் டையமண்ட் ஜூவல்லரி ஷோ" டிசம்பர் 5 முதல் 21 வரை...!

கோவை மாவட்டம் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியில் உள்ள உலகின் ஃபேவரட் ஜுவல்லர் ஜோய் ஆலுக்காஸில் தமிழ்நாட்டை பிரகாசிகாச் செய்யும் பிரில்லியன்ஸ் டையமண்ட் ஜூவல்லரி ஷோ டிசம்பர் 5 முதல் 21 வரை நடத்துகிறது. மிகுந்த எதிர் பார்ப்புடன் நடைபெறும்.



இந்த கண்காட்சியில்,வைர நகைகளின் தலைசிறந்த கலைநயம், அழகியல் மற்றும் புதுமையை ஒருங்கி ணைக்கிறது. மேலும் இதனை மறக்க முடியாத இனிய அனுபவமாக வாடிக்கையாளர்களுக்கு அளித்திட ஜோய் ஆலுக்காஸ் விசேஷமாக இந்த கண்காட்சியை வடிவமைத்துள்ளது.இந்த கண்காட்சியில் மணமகளுக்கான வைர நகை செட் முதல்,தினசரி அணிவதற்கான நவீன வைர நகைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.பாரம்பரியத்தை பிரதிபலிக்கும வகையிலும் நவீன வடிவமைப்புகளும் கண்காட்சியில் உள்ளது.



இந்த நிகழ்வில் வாடிக்கையாளர்கள், பத்மஸ்ரீ டாக்டர் ஜி. பக்தவத்சலம் (நிறுவனர் & தலைவர், கே ஜி மருத்துவமனை, கோவை), டாக்டர் அனுஷா ரவி (தலைமை நிர்வாக அதிகாரி - பார்க் குழும நிறுவனங்கள் ராஜேஷ் கிருஷ்ணன் சில்லறை விற்பனைத் தலைவர், ஜோயாலுக்காஸ்), சுமேஷ் கே.ஏ (பிராந்திய மேலாளர், ஜோயாலுக்காஸ்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சியினை துவக்கி வைத்தனர்.



ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் சேர்மன் டாக்டர்.ஜோய் ஆலுக்காஸ் தெரிவிக்கையில் "பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி வைரங்களின் வசீகரத்திற்கும் அந்த வசீகரத்தின் வடிவமைப்பிற்கும் ஆபரண வல்லுனராக நாங்கள் செலுத்தும் மரியாதை மற்றும் கலை ஆர்வத்திற்கான ஓர் அடையாளம் என்றும் கோயம்புத்தூர் மாநகரம் எங்கள் பயணத்தில் எப்போதும் ஒரு தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது, அதற்காகவே தற்போது விழாக்கால நேரங்களில் நடைபெறும் இந்த கண்காட்சியை மிகவும் விசேஷமாக வடிவமைத்திருக்கிறோம். வாடிக்கையாளர்கள் அழகு, தனித்துவம் மற்றும் கலைநயம் ஆகிய அனைத்தையும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தும் ஆபரணங்களை தலைசிறந்த வடிவமைப்புகளை இந்த கண்காட்சியில் தேர்ந்தெடுக்கலாம் என்றார்.மேலும், இந்த கண்காட்சி காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பில் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப் படுகிறது.அழகு, தரம் மற்றும் காலம் வென்ற கலைநயத்தை கொண்ட வைர நகைகளின் அழகிய உலகத்தை அனுபவிக்க அனைவரையும் ஜோயலுக்காஸ் அன்புடன் அழைக்கிறோம் என்று கூறினார்.

📝 செய்தியாளர்:லீலாகிருஷ்ணன்📱 99942 55455

No comments

Thank you for your comments