காஞ்சிபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி, ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம், டிச.11:
காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு கிராமத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கானது வரவிருக்கிற சட்டப் பேரவைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு முதல்நிலை சரிபார்ப்பு பணிகளுக்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
முதல் நிலை சரிபார்ப்பு பணியானது டிச.11 வியாழக்கிழமை முதல் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பெல் நிறுவன பொறியாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படவுள்ளது.
வாக்குப்பதிவு செய்யும் இயந்திங்கள், வாக்கு எண்ணிக்கை கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உட்பட மொத்தம் 7508 இயந்திரங்கள் சரிபார்க்கப்படவுள்ளன. முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் நடத்தப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெல் நிறுவன பொறியாளர்களால் மட்டுமே சரிபார்க்கப்படும்.பின்னர் அவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும்த தொகுதி வாரியாக பிரித்து வழங்கப்படும் எனவும் ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇

No comments
Thank you for your comments