தனிநபர் வருமானம் மற்றும் தன்மானத்தை உயர்த்தியது திராவிட மாடல் அரசு - அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேட்டி
| பேட்டி : வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் |
அதன் ஒரு வகையில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அமைப்பின் பணியாற்றும் முகவர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஆன தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
வாக்கு சாவடி இல் பணிபுரியும் திமுக முகவர்கள் பணிகள் குறித்தும் அவர்கள் கடந்த இரு தேர்தலில் பெற்றுத் தந்த வாக்குகள் குறித்த புள்ளி விவரங்களுடன் அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் கடந்த தேர்தலை விட வரும் சட்டமன்ற தேர்தலுக்கு கூடுதல் வாக்குகள் பெறும் வழிமுறைகளை ஆலோசனையாக வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம் , பள்ளி கல்லூரி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி அவர்களுக்கு உலகளவில் ஒரு அடையாளத்தையும், வருமானத்தையும் அளித்தது திமுக அரசு எனவும், இதே போல் தனிநபரின் வருமானங்களையும் உயரச் செய்தது திராவிட மாடல் அரசு என தெரிவித்தார்.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக முதல்வரை நல்லவர் என்ற குறிப்பிட்டது அனைவருக்கும் தெரியும் ஆனால் மக்கள் மனதில் நிலைக்கும் வகையில் மகளிர் பேருந்து பயணம் மகளிர் உரிமைத்தொகை என அறிவித்த அனைத்து திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அதிமுக கூடாரம் கலைந்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு தேன் தடவி அதிமுக வெல்லும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் .
இந்நிகழ்ச்சியில் , மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார் மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments