காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் இளைஞர் திருவிழா
காஞ்சிபுரம், டிச.11:
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை ஒன்றிணைத்து கதை, கவிதை, ஓவியம், பேச்சு, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் பச்சையப்பன் ஆடவர் மற்றும் பெண்கள் கல்லூரி,கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.
ஒரு நாள் நிகழ்வாக நடைபெற்ற இப்போட்டிகளின் நிறைவு விழாவிற்கு முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ம.கணபதி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஆர்.சுரேஷ்குமார், மு.விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேராசிரியை பா.பூர்ணிமா வரவேற்று பேசினார்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇

No comments
Thank you for your comments