காஞ்சிபுரம் முருகன் கோயிலில் மூத்த தம்பதியர்களுக்கு மரியாதை
காஞ்சிபுரம், டிச.15:
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 100 மூத்த தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மணடலங்களில் 2000 தம்பதிகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் மரியாதை செய்யப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருந்தார்.
அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக 70 வயது நிறைவடைந்த மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 70 வயது நிறைவடைந்த மூன்று மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.கோயில் செயல் அலுவலர் கேசவன் தலைமையில் மூத்த தம்பதிகளுக்கு பட்டு வேட்டி, சேலை,மஞ்சள் குங்குமம்,பழ வகைகள், சுப்பிரமணிய சுவாமி படம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மூத்த தம்பதியர்கள் மாலை மாற்றிக் கொண்ட பின்னர் ஆலய பூஜகர் சந்திர மௌலி சிறப்பு மரியாதை செய்து வாழ்த்துக்கூறினார்.நிகழ்வில் கோயில் பணியாளர்கள்,மூத்த தம்பதியர்களின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments