Breaking News

மடிக்கணினி திட்ட விழிப்புணர்வு - மாணவரணியினர் துண்டுப்பிரசுரம் விநியோகம்


காஞ்சிபுரம், டிச.15:

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் மற்றும் மகளிர் கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவியர்க்கு மடிக்கணினி திட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை திங்கள்கிழமை அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார் தலைமையிலான குழுவினர் வழங்கினர்.


காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி பெரியார் நகரிலும்,மகளிர் கல்லூரி சின்னக்காஞ்சிபுரத்திலும் செயல்பட்டு வருகிறது.இவ்விரு கல்லூரிகளின் நுழைவுவாயிலிலும் அதிமுக மாவட்ட மாணவரணியின் செயலாளர் திலக்குமார் தலைமையில் மாணவரணியினர் மடிக்கணினித் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

பின்னர் திலக்குமார் கூறுகையில் அதிமுக அரசு ஆட்சிக்காலத்தில் மடிக்கணினித் திட்டம் செயல்பட்டு வந்தது.அதன் பின்னர் வந்த திமுக அரசு அத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்து விட்டது.

தற்போது சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் 10லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினித் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்து பொய்யான வாக்குறுதியை திமுக செய்து வருகிறது.

தேர்தலில் வாக்குகளைப் பெறவே திமுகவினர் மடிக்கணினித் திட்டத்தை செயல்படுத்துவதாக கூறுவதை ஏற்காதீர் என அச்சடிக்கப்பட்ட விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை கல்லூரி மாணவர் மற்றும் மாணவியரிடம் மாணவரணியினர் வழங்கினார்கள்.

No comments

Thank you for your comments