திமுக அரசு மக்கள் மனதில் நிற்கும் திட்டங்களை செயல்படுத்துகிறது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு
காஞ்சிபுரம், டிச.11:
திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அமைப்புகளில் பணியாற்றும் முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளரும்,எம்எல்ஏவுமான க.சுந்தர் தலைமை வகித்தார்.எம்எல்ஏ எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும்,வேளாண்மைத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் திமுக முகவர்களின் பணிகள் குறித்தும் அவர்கள் கடந்த இரு தேர்தல்களிலும் பெற்றுத்தந்த வாக்குகள் குறித்த புள்ளி விபரங்களோடும் ஆலோசனை நடத்தினார்.
கடந்த தேர்தல்களை விட வரும் பேரவைத் தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெறும் வழிமுறைகளையும் ஆலோசனையாக அமைச்சர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் மக்கள் மனதில் நிற்கும் வகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம்,மகளிர் பேருந்து பயணம் உட்பட பல நல்ல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் பலவற்றையும் பிற மாநில அரசுகள் பாராட்டுவது மட்டுமின்றி அத்திட்டங்களை பின்பற்றவும் செய்கின்றன.
அதிமுகவின் கூடாரம் கலைந்து வரும் நிலையில் ஆட்சிக்கு வருவோம் என்று எடப்பாடி கே.பழனிசாமி கூறி வருவது வியப்பாக இருக்கிறது என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
பின்னர் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் திமுக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் அமைச்சர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வழங்கினர்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇

No comments
Thank you for your comments