Breaking News

யூடியூபர் முக்தார் அகமதுவை கைது செய்யக் கோரியும்,சேனலை முடக்கக்கோரியும் காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு...!



கோவை மாவட்டம் கோவை நாடார் சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசி வரும் யூடியூபர் முக்தார் அகமதுவை உடனடியாக கைது செய்யக் கோரியும் அவர் நடத்திவரும் யூடியூப் சேனலை உடனடியாக முடக்கக்கோரியும் நாடார் சங்க தலைவர் பாஸ்கரன் நாடார் மற்றும் பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.விமலராகவன் தலைமையில் காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.



உடன் பொருளாளர் ராஜமாணிக்கம் துணைத் தலைவர்கள் ராதா கிருஷ்ணன்,சந்தன பால்ராஜ்,வாசகன் செயலாளர்கள், சிலுவைமுத்துக்குமார், விஜயகுமார் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நாடார் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர்.

📝 செய்தியாளர்:லீலாகிருஷ்ணன்📱99942 55455

No comments

Thank you for your comments