காஞ்சிபுரத்தில் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் -151 பேர் கைது
காஞ்சிபுரம், டிச.4:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் துரை.மருதன், கருவூல கணக்குத்துறை மாநில பொதுச் செயலாளர் லெனின், மாநில துணைத் தலைவர் வாசுதேவன், மகளிர் அணியின் நிர்வாகி திலகவதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி ஆர்ப்பாட்டத்திலும் அதனைத் தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டார்கள்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் ஆகியோருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அலுவலக பணி நேரத்துக்கு பின்பும் விடுமுறை தினங்களிலும் ஆய்வுக்கூட்டம் நடத்துவதை அதிகாரிகள் கைவிட வேண்டும், பெண் அரசு ஊழியர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக காவல்துறையினரால் 151 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


No comments
Thank you for your comments