ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்....!
கோவை மாவட்டம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சிவதிருமேனிநாதன் ஆணைக்கிணங்க மாநில பொதுச் செயலாளர் ஆ.மோகன் வழிகாட்டு தலின்படி கருப்பு பட்டை அணிந்து கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை கோவை மாவட்ட தலைவர் ஆர். தண்டபாணி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், கிளைத் தலைவர்கள், தோழமை சங்க நிர்வாகிகள் ராஜசேகரன், கனகாசலம், வேலுச்சாமி, அய்யாசாமி, ஜெயப்பிரகாஷ், ராஜேஸ்வரன், சக்தி, முன்னிலை வகிக்க மாவட்ட பொருளாளர் கே.மணி வரவேற்பு உரையாற்ற, கோரிக்கைகள் விளக்க உரையை கோவை மாவட்ட செயலாளர் டி.எஸ். ஆரோக்கியசாமி கவன ஈர்ப்பு கோரிக்கைகளை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு இணையாக 2016 ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதி யர்களுக்கும் ஓய்வு ஊதிய மற்றும் குடும்ப ஊதியம் மறு நிர்ணயம் செய்து திருப்பி அமைத்து கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 70 வயது நிறை வடைந்தவர்களுக்கு பத்து விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டுமென்றும், கமிட்டேஷன் தொகையில் 15 ஆண்டுகள் பிடித்தம் செய்வதற்கு பதிலாக 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டுமென்றும், குடும்ப பாதுகாப்பு நிதி 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்தி வழங்கிடவும், மருத்துவ படியாக மாதந்தோறும் ஓய்வூதியர்களுக்கு ஆயிரம் வழங்கவும், உண்மையான காசு இல்லாத மருத்துவ சிகிச்சை ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் ராமதாஸ்,அப்துல்லா, யூசப்,சக்திவேல், கிளை நிர்வாகிகள் கிளை உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments