விருத்தாசலம் – ஜெயலலிதா நினைவு தினம்: அன்னதானம் நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வை நகர செயலாளர் பி.ஆர்.சி சந்திரகுமார் முன்னிலையில் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஸ்டேட் பேங்க் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருள்மொழி தேவன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதன் பின்பு, அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!
No comments
Thank you for your comments