அமிர்தாவில் தி ஹவுஸ் ஆப் பாஸ்ட்ரீஸ் மற்றும் ஃப்ரூட் மிக்ஸிங் திருவிழா....!
கோவை மாவட்டம் தடாகம் சாலை கேஎன்ஜி புதூர் பிரிவு பகுதியில் உள்ள அமிர்தா இன்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி பயிற்சி நிறுவணத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமிர்தா மாணவர்களுக்காக தி ஹவுஸ் ஆப் பாஸ்ட்ரீஸ் மற்றும் ஃப்ரூட் மிக்ஸிங் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமிர்தா இன்ஸ்டியூட் தலைமை செயல் அதிகாரி சுரேஸ் குமார் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இவ்விழாவில் பிளம் கேக் தயாரிப்புக்காக பாதாம்,பிஸ்தா, முந்திரி,திராட்சை. பேரிச்சம்பழம், போன்ற 50கிலோ உலர் பழங்கள் பயன்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுக்கு ப்ளம் கேக் தயாரிப்பது எப்படி,அதன் செய்முறை விளக்கங்கள் மூலம் ஃப்ரூட் மிக்ஸிங் செய்த பிறகே ப்ளம் கேக் தயாரிக்க முடியும் என்பதையும், அதற்காக ரம் மற்றும் ஒயின் பானங்களில் 20 முதல் 30 நாட்கள் உளர வைக்க வேண்டும் என்பதையும் தலைமை செயல் அதிகாரி சுரேஸ் குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அமிர்தா இன்ஸ்டியூட் நிர்வாக அலுவலர் சுமதி,செஃப் கார்த்திகேசவன், அமிர்தா இன்ஸ்டியூட் மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
📝 செய்தியாளர்:லீலாகிருஷ்ணன்📱99942 55455

No comments
Thank you for your comments