🔴 விருத்தாசலத்தில் இலவச வீட்டு மனை பட்டா கோரி ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
பரவலூர் கிராமத்தில் வீட்டு மனை இல்லாமல் வாழும் 57 குடும்பங்கள்
📝 8 ஆண்டுகளாக மனு – நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு
இக்குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி, கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களில் மனுக்கள் அளிக்கப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை எந்தவிதமான உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
🌾 100 ஏக்கர் நிலம் இருந்தும் ஒதுக்கவில்லை – அதிகாரிகள் அலட்சியம்?
மேலும், அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் பிள்ளை என்பவரிடம் 100 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அதில் ஆறு ஏக்கர் நிலம் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிலத்தை இலவச வீட்டு மனைக்காக வழங்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தும், அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
✊ நூற்றுக்கும் மேற்பட்டோர் அலுவலக முற்றுகை – தர்ணா போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த பரவலூர் கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்,
விருத்தாசலம் ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு,
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
🤝 பேச்சுவார்த்தை – போராட்டம் வாபஸ்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம்,
ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் மஞ்சுளா நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, விரைவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
✍️ செய்தியாளர் : R. காமராஜ்
📞 தொடர்பு : 9080215691
📞 தொடர்பு : 9080215691
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇

No comments
Thank you for your comments